Tamil Poem · by இராஜ்
அம்மா. . . !
இன்னும். .
உந்தன் நினைவுகள். . . .
எட்டி பார்க்கும். .
என் இதயம். . . .
ஒரு கண்ணாடி. .
எண்ணும். . . .
அந்த நேரத்தில். .
தட்டி கேட்கும். . . .
என் கவிதைகள். .
உயிர்நாடி. . . .
கண்ணயரும் வேளையிலே
பண்ணுயரும் தேடல் அம்மா
மண்ணுலகில் உன்னை தேட
காணவில்லை என்னை இங்கே
கண்கலங்க வேண்டாம் அங்கே
ஏரிக்கரை ஓரம் அம்மா
ஏழு மலை தூரம் சும்மா
காலமெல்லாம் உன்னை தேடி
கால்கள் போகும் வாரம் அம்மா
கண்ணாலே கண்ணீர் ஊற்றும்
சொன்னாலே தண்ணீர் வற்றும்
முன்னாலே எழுதி வைச்ச
கவிதைகள் கண்கள் ஒற்றும்
தன்னாலே தாளம் போடும்
விண்ணோடு மேகம் கூடும்
மண்ணோடு சொல்லி அழ
மனதோடு மழை தூறும்
இமைகள் இப்போ குடையாகும்
முற்று பெறா கவிதை இது
முடிச்சு வைக்க அரும்புகிறேன்
பெற்று பெறா ஆசைகளை
படிச்சு வைக்க விரும்புகிறேன்
இன்னும். .
உந்தன் நினைவுகள். . . .
எட்டி பார்க்கும். .
என் இதயம். . . .
ஒரு கண்ணாடி. .
எண்ணும். . . .
அந்த நேரத்தில். .
தட்டி கேட்கும். . . .
என் கவிதைகள். .
உயிர்நாடி. . . .
கண்ணயரும் வேளையிலே
பண்ணுயரும் தேடல் அம்மா
மண்ணுலகில் உன்னை தேட
காணவில்லை என்னை இங்கே
கண்கலங்க வேண்டாம் அங்கே
ஏரிக்கரை ஓரம் அம்மா
ஏழு மலை தூரம் சும்மா
காலமெல்லாம் உன்னை தேடி
கால்கள் போகும் வாரம் அம்மா
கண்ணாலே கண்ணீர் ஊற்றும்
சொன்னாலே தண்ணீர் வற்றும்
முன்னாலே எழுதி வைச்ச
கவிதைகள் கண்கள் ஒற்றும்
தன்னாலே தாளம் போடும்
விண்ணோடு மேகம் கூடும்
மண்ணோடு சொல்லி அழ
மனதோடு மழை தூறும்
இமைகள் இப்போ குடையாகும்
முற்று பெறா கவிதை இது
முடிச்சு வைக்க அரும்புகிறேன்
பெற்று பெறா ஆசைகளை
படிச்சு வைக்க விரும்புகிறேன்
ஊக்கம்: தமிழ்
ஆக்கம்: இராஜ்