📝 கவிதைகள்

தொடர்புடைய உள்ளடக்கம்

இப்போது படிக்கிறீர்கள்:

மழையே மழையே

📚

தொடர்புடைய உள்ளடக்கம் இல்லை

அனைத்து கவிதைகள் பார்க்க

Tamil Poem · by இராஜ்

மழையே மழையே

மழையே மழையே மனதை நனைத்தாயே உழுத கரங்களுக்கு உணவை மறைத்தாயே பசியின் கண்ணீரை பார்த்து கடந்தாயே ஏழையின் நெஞ்சிலே ஏக்கத்தை விதைத்தாயே மழையே மழையே மனதை நனைத்தாயே நெல்வயல் ஓரத்தில் நிழல்கள் அழுகிறதே நெஞ்சுக்குள் புதைந்த கனவு நீரிலே கரைகிறதே காய்ந்திடும் கைகளில் காலங்கள் உறங்குதே காத்திருக்கும் விழிகள் விடியலைத் தேடுதே மழையே மழையே மனதை நனைத்தாயே மண்ணோடு வாழ்ந்தோம் மண்ணையே நம்பினோம் வானத்தை நோக்கி வாழ்வை விதைத்தோம் பச்சை நெல் அசைந்தால் பாசங்கள் மலர்ந்ததே பாதியில் வந்த துன்பம் பயிர்களை பறித்ததே களஞ்சியம் நிரம்பவே கனவுகள் கண்டோமே காலத்தின் கைகளில் கண்ணீரை தந்தோமே உழுத கரங்களுக்கு உணவை மறைத்தாயே அம்மாவின் கைகளில் அன்புதான் இருந்ததே அடுப்பங்கரையிலோ அக்கினி அணைந்ததே பிள்ளையின் விழிகளில் பசியோ தெரிந்ததே பேசாமல் தாய்மனம் வேதனை சுமந்ததே கண்ணீரை மறைத்தே கஞ்சி தான் காய்ச்சினாள் தனக்கிருந்த பசியை தரையில் புதைத்தாளே ஏழையின் நெஞ்சிலே ஏக்கத்தை விதைத்தாயே கடன்களின் சுமைகள் தோள்களை வளைத்ததே காலத்தின் பாதைகள் காயங்கள் தந்ததே வாசலில் நின்றவர் வாழ்வையே கேட்டாரே வறுமையின் மொழியை யாருமே கேளாரே இருட்டான வானிலும் நட்சத்திரம் வாழுமே இறைவனின் கருணை ஒருநாள் சேருமே காத்திருக்கும் விழிகள் விடியலைத் தேடுதே மழையே மழையே மனதை நனைத்தாயே உழுத கரங்களுக்கு உணவை மறைத்தாயே பசியின் கண்ணீரை பார்த்து கடந்தாயே ஏழையின் நெஞ்சிலே ஏக்கத்தை விதைத்தாயே வறுமையின் இரவிலும் நம்பிக்கை வாழுதே மழையே மழையே மனதை நனைத்தாயே
ஊக்கம்: தமிழ்
ஆக்கம்: இராஜ்

பகிர்தல்

Facebook X WhatsApp